முத்தாலம்மன் கோவில் வைகாசி திருவிழா

முத்தாலம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் முளைப்பாரியை வைத்து கும்மியடித்தனர்.

Update: 2022-06-11 20:19 GMT

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள கிழவனேரி கிராமத்தில் முத்தாலம்மன், காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா 4 நாட்கள் நடைபெற்றது. விழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் நேர்த்திக்கடன் நேர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்தனர். இதனை தொடர்ந்து முத்தாலம்மன் சிலை செய்யப்பட்டு கண் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் என விடியும் வரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதிகாலையில் அம்மனுக்கு கிடாய் வெட்டப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. 4-ம் நாள் நிகழ்வாக நேற்று மாலை அம்மன் கரகம் கரைக்கப்பட்டது. ஆற்றில் ஆண்களும், பெண்களும் முளைப்பாரியை வைத்து கும்மியடித்தனர். மஞ்சள் நீராட்டு விழா முடிந்தவுடன் முத்தாலம்மன் சிலையுடன் 2 ஆயிரம் முளைப்பாரிகளும் சேர்ந்து வழி அனுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர் எல்லை காவல் செல்லும் முத்தாலம்மன் பிரியா விடை பெற்று சென்றார். ஊர் எல்லைக்குச் சென்று முத்தாலம்மன் ஊரைக் காவல் காப்பார் என்பது நம்பிக்கை. இந்த திருவிழா சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது குறிப்பிடத்தக்கது. 4 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்