முத்தாலம்மன் கோவில் திருவிழா

இடையக்கோட்டை அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2023-06-15 19:00 GMT

இடையக்கோட்டை அருகே உள்ள கேதையுறம்பு கோட்டை முத்தாலம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 12-ந்தேதி ஊர் எல்லையில் இருந்து உற்சவர் முத்தாலம்மனுக்கு அலங்காரம் செய்து தேவராட்டத்துடன், மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். விழாவில் 14-ந்தேதி பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் ஆகிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவு வாணவேடிக்கை நடந்தது. நேற்று காலை பெண்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். மாலை மஞ்சள் நீராட்டுடன் உற்சவர் அம்மனை ஊர்வலமாக கொண்டு சென்று கோவில் கிணற்றில் கரைத்தனர். விழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்