உளுந்து, பயறு கொள்முதல் செய்ய வேண்டும்- விவசாயிகள்
அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை குழு மூலம் உளுந்து, பயறு வகைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.;
அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை குழு மூலம் உளுந்து, பயறு வகைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
உளுந்து சாகுபடி
மெலட்டூர் அருகே உள்ள கள்ளர்நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் சித்திரை பட்டத்தில் பல ஏக்கர் பரப்பளவில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. உளுந்து பயிர்கள் அறுவடை பருவத்தை எட்டி உள்ளதால் தற்போது உளுந்து அறுவடை செய்யும் பணி பரவலாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அறுவடை செய்யப்படும் உளுந்தை வேளாண் கமிட்டி மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். மென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பகுதியில் கோடை பயிராக உளுந்து அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது உளுந்து செடிகள் காய்கள் முற்றிய நிலையில் அறுவடை பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து மெலட்டூர் பகுதியை சேர்ந்த விவசாயி குமார் கூறியதாவது:-
ரூ.10 ஆயிரம் வரை...
இந்த ஆண்டு சித்திரை பட்டத்தில் மெலட்டூர் பகுதியில் கோடை பயிராக உளுந்து அதிகளவில் பயிர் செய்துள்ளோம். கடற்பாசி உள்பட இயற்கை உரங்களை பயன்படுத்தி உளுந்து சாகுபடி செய்துள்ளதால் செடிகள் நன்றாக வளர்ந்தன.
கோடை மழை அதிகளவில் பெய்ததால் உளுந்து செடிகள் நல்ல முறையில் பூ பூத்து காய் காய்த்துள்ளது. காய்கள் முற்றி விட்டதால் உளுந்து செடிகளை தற்போது பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ளுந்துக்கு நல்ல விலை கிடைக்கும் என நம்புகிறோம். குவிண்டல் ரூ.10 ஆயிரம் வரை விலை போகும் என எதிர்பார்க்கிறோம்.
கொள்முதல்
உளுந்தை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதை விட அரசு வேளாண் ஒழுங்குமுறை கமிட்டியில் விற்பனை செய்தால் கூடுதலாக விலை கிடைக்கும். எனவே பருத்தியை போன்று உளுந்து, பயறு வகைகளையும் அரசு வேளாண் விற்பனை குழு மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.