லாக்-அப்' மரணங்களுக்கு முற்றுப்புள்ளி; மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

விசாரணை கைதிகளை நடத்தவேண்டியவிதம் தொடர்பாக நீதிமன்றங்கள் பல தீர்ப்புகள், அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தாலும், 'லாக்-அப்' மரணங்கள் தொடர்வது கொடுமையானது.

Update: 2022-06-14 13:07 GMT

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

விசாரணை கைதிகளை நடத்தவேண்டியவிதம் தொடர்பாக நீதிமன்றங்கள் பல தீர்ப்புகள், அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தாலும், 'லாக்-அப்' மரணங்கள் தொடர்வது கொடுமையானது. குற்றவாளியே என்றாலும் தண்டிக்கவேண்டியது நீதித்துறைதான், காவல்துறையல்ல என்ற எளியோனுக்கும் தெரிந்த சட்டமுறையை காவல்துறை கடைபிடிக்காமல் முரண்டு பிடிப்பது கண்டனத்துக்குரியது. காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர், காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யவேண்டும்.

காவல்நிலையத்தில் நீதி மறுக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படவேண்டும். காவல்நிலையங்களில் மக்களுக்கு நீதி கிடைத்திட, மக்கள் நீதி மய்யம் ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கில் கோரியபடி "தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-ல்" சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாகவுள்ள பிரிவுகள் சீரமைக்கப்பட்டு "காவல்துறை புகார் ஆணையமானது" வலுவாக்கப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்