கல்வி அறிவுடன் தனித்திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்

கல்வி அறிவுடன் தனித்திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என மோகனாநந்த சுவாமிகள் பேசினார்.

Update: 2022-08-29 16:32 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு எஸ்.எஸ்.எஸ் .கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஏ.என்.சரவணன், மேனேஜிங் டிரஸ்டி ஏ. என்.செல்வம், செயலாளர் ஏ.என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறை தலைவர் விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சித்தஞ்சி சிவகாளி பீடம் மோகனாநந்த சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது உங்களை பெற்றெடுத்த பெற்றோர்களையும், கல்வி கற்றுத் தரும் குருவையும் மதித்து நடக்க வேண்டும். ஆசிரியர் கற்றுத்தரும் கல்வி அறிவோடு உங்களின் தனி திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி காண வேண்டும் என்றார்.

கல்லூரி நிறுவனத் தலைவர் ஏ.கே.நடராஜன் பேசுகையில் மாணவர்கள் சிறு சிறு ஆசைகளில் மனம் செலுத்தாமல் உயர்வான சிந்தனைகளில் மனம் செலுத்தி வாழ்வில் உயர்வடைய வேண்டும். இந்த கல்லூரியில் படித்து சிறந்த அதிகாரிகளாக வாழ்வில் விளங்க வேண்டும் என்றார்.

வணிக நிர்வாகவியல் துறை தலைவர் கே.வி.சிவக்குமார், பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். வேதியியல் துறை தலைவர் தமிழ்த் தென்றல் நன்றி கூறினார். விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்