இஸ்லாமியர்கள் சீர்வரிசை

நன்னிலம் அருகே மேகநாதசாமி கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் சீர்வரிசையுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-10 18:45 GMT

நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்கலம் கிராமத்தில் மேகநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 7-ந்தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று மேளதாளங்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்தது. பின்னர் விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இக்கோவில் குடமுழுக்கு விழாவிற்கு மதநல்லினக்கத்திற்கு எடுத்து காட்டாக அந்த பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் பேனர் வைத்தனர். மேலும் இஸ்லாமியர்கள் சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்துவந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த செயலை அனைவரும் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்