கடலூர் முதுநகர்ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் முஸ்லிம் பெண்கள் சாமி தரிசனம்சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் முஸ்லிம் பெண்கள் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Update: 2023-08-08 18:45 GMT

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகரில் பிரசித்தி பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 2 முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தபடி குழந்தையுடன் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலுக்கு வந்து, பக்தியுடன் மண்டியிட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்கள் சிலர் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஒரு சிலர் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதுடன் மீண்டும் இக்கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி செல்கிறார்கள் என்றார். மத நல்லிணக்கமாக பார்க்கப்படும் இந்த நிகழ்வு தற்போது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்