முசிறி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

முசிறி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-11 20:12 GMT

முசிறி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் மாலா தலைமையில் நடைபெற்றது. ஆணையர்கள் அண்ணாதுரை, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள், டெண்டர் பற்றி கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டு்ம் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அதற்கு தலைவர் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினார். கூட்டத்தில் ஆணையர் அண்ணாதுரை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபிநாத், தனபால் ராஜ், கணக்கர் ரெங்கராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மேலாளர்) ஊராட்சிகள் நாகராஜ் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி தலைவர், கவுன்சிலர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவது போல் ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணைத் தலைவர் ரமேஷ் பாபு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்