கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளிக்கு இசைக்கருவிகள்

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளிக்கு இசைக்கருவிகள் வழங்கப்பட்டன.

Update: 2022-08-17 16:16 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சுவிட்சர்லாந்து தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அதிகாரி சின்னராசு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதா, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் கவுரி முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ரூத் ரத்தின குமாரி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சுவிட்சர்லாந்து சங்கமம் தொண்டு நிறுவன பிரதிநிதி கவிதா பள்ளி மாணவிகளிடம் இசைக் கருவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்துமுருகன், ஆசிரியர்கள் கண்ணன், சீனிவாசன், வேல்முருகன், சுப்பிரமணியன், உடற் கல்வி இயக்குனர் காளிராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். இசை ஆசிரியை அமல புஷ்பம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்