முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Update: 2023-06-09 16:03 GMT


தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு பல்லடம் வட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன்படி மாதப்பூர் முத்துக்குமார சுவாமி மலைக்கோவிலில்

முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதே போல் பால தண்டாயுதபாணி கோவில், பொன் காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.

மேலும் செய்திகள்