காரில் கடத்திச்சென்று தொழிலாளி படுகொலை

காரில் கடத்திச்சென்று தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் வலங்கைமான் அருகே சாலையில் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-10-19 18:45 GMT

காரில் கடத்திச்சென்று தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் வலங்கைமான் அருகே சாலையில் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொழிலாளி கடத்தல்

தஞ்சை மாவட்டம் பூண்டி அருகே உள்ள புலவர்நத்தம் குடியான தெருவை சேர்ந்த ஜவகர் மகன் ராஜ்மோகன் (வயது39). தொழிலாளி. இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி அருகே மனைவி இலக்கியா மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார்.

இவருக்கும், அவருடைய உறவினர்களுக்கும் இடையே நிலம் மற்றும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. நேற்று காலை வீட்டில் இருந்த ராஜ்மோகனை மர்மநபர்கள் சிலர் காரில் கடத்தி சென்று விட்டதாக அவருடைய உறவினர்கள் தஞ்சை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

சாலையில் கிடந்த பிணம்

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அவளிவநல்லூர் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் காயங்களுடன் ஆண் பிணம் கிடப்பதாகவும், காரில் வந்த சிலர் அந்த பிணத்தை சாலையில் வீசி சென்றதாகவும் அரித்துவாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா மற்றும் அரித்துவாரமங்கலம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி, கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணை

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் காயங்களுடன் பிணமாக கிடந்தவர் தஞ்சையில் இருந்து கடத்தப்பட்ட ராஜ்மோகன் என்பதும், அவரை கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து உடலை காரில் கொண்டு வந்து அவளிவநல்லூர் கிராம பகுதியில் சாலையில் வீசி சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்