வாடிப்பட்டி, ஜூன்.23-
வாடிப்பட்டி அருகே நீரேத்தான் யூனியன் ஆபீஸ்பின்புறம் குடியிருந்து வருபவர் முத்துகருப்பன் மகன் முருகன் (வயது 47). கொய்யாப்பழ வியாபாரி. இவர் சந்தை பாலம் அருகே சாலையோரம் கொய்யாப் பழம் வியாபாரம் செய்து வந்தார்.இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் தாதம்பட்டி ஒட்டன் குளக்கரையில் கால்நடை மருத்துவமனை அருகில் நடைபாதையில் முகத்தில் குத்துகாயத்துடன் பிணமாக கிடந்தார். முருகன் எதற்கு அங்கு வந்தார் என்ன நடந்தது. அவரை யார் கொலை செய்தார்கள் என்ன காரணம் என்ற விவரம் தெரியவில்லை. இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.