மதுரையில் சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை

மதுரையில் சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.;

Update:2022-06-21 02:36 IST


மதுரை செல்லூர் மேல தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 33). சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று இரவு இவர் நண்பர் மதனுடன் சிவன் கோவில் தெரு அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பிச்சை மணியிடம் தகராறு செய்தது. பின்னர் அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த போது பிச்சைமணி இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மதனுக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்த 3 பேரை தேடி வருகிறார்கள். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்