ரூ.14 லட்சத்தில் 2 புதிய வகுப்பறையை முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்
ராமாபுரத்தில் ரூ.14 லட்சத்தில் 2 புதிய வகுப்பறையை முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த செங்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் ரூ.14 லட்சத்தில் இரண்டு புதிய வகுப்பறை கட்டி திறப்பு விழா நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் டி.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செங்கல்நத்தம் முனியம்மாள் பிச்சாண்டி, கொடைக்கல் சசிகலா கார்த்தி, சோளிங்கர் நகர காங்கிரஸ் தலைவர் டி.கோபால், பொறியாளர் தாசரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். கிராம நிர்வாக அலுவலர் சானு, வட்டார ஒருங்கிணைப்பாளர் சிந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ் சவுந்தரராஜன் தனசேகர் நன்றி கூறினார்.