நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.
கரூர் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் சங்க கூட்டத்தில் நடைபெற்றது. இதற்கு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கரூர் மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றும் வகையில் ரூ.40 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கு பாராட்டு தெரிவிப்பது, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் இறந்தால் குழு காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.