சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம்
சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் அதன் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது.;
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதற்கு பதிலளித்து நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பேசுகையில், கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில், நகராட்சி கவுன்சிலர்கள், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், மேலாளர் மாரியம்மாள், மேற்பார்வையாளர் கோமதி நாயகம், கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.