கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த நகராட்சி ஊழியர்கள்

கோரிக்கை அட்டை அணிந்து நகராட்சி ஊழியர்கள் பணிபுரிந்தனர்.

Update: 2023-08-04 20:01 GMT

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் நகராட்சி ஊழியர்கள் நேற்று பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அணிந்து பணிபுரிந்தனர். அரசு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். பணியிட மாறுதல்களை கலந்தாய்வு மூலமாக மேற்கொள்ள வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அலுவலக நேரத்தில் ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். கூட்டங்களில் கண்ணிய குறைவான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை உடையில் அணிந்து அவர்கள் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்