பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நங்கவரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நங்கவரம் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன் தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சி ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அரசாணை 139-ஐ திரும்ப பெற வேண்டும், ஊழியர்களை நிரந்தரம் செய்யவேண்டும், அடிப்படை சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.