சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்
வாணியம்பாடியில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
வாணியம்பாடி நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவே ஆங்காங்கே சுற்றித்திரிவதாக வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி நேற்று வாணியம்பாடி சி.என்.ஏ. சாலை பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த மூன்று மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து சாலைகளில் சுற்றித்திரியும் அனைத்து மாடுகளையும் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.