ஆம்பூரில் நகராட்சி நிர்வாக செயலாளர் ஆய்வு

ஆம்பூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை நகராட்சி நிர்வாக செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-02-01 14:07 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாக செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது நகராட்சி ஆணையாளர் ஷகிலா, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்