நகராட்சி நிர்வாக அரசு செயலாளர் ஆய்வு

குத்தாலம் பேரூராட்சியில் நகராட்சி நிர்வாக அரசு செயலாளர் ஆய்வு செய்தார்.

Update: 2023-08-25 18:45 GMT

குத்தாலம்:

தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அரசு திட்டப்பணிகள் முன்னேற்றம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்த உள்ளார். இதையொட்டி பல்வேறு அரசு துறை செயலாளர்கள் இயக்குனர்கள் தங்கள் துறையின் கீழ் திட்ட பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு செயலாளர் கார்த்திகேயன் , பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குரலா ஆகியோர் நகரப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் ரூ.3கோடி மதிப்பிலான கலைஞர் நகர் சாலை பணிகள் ரூ. 92.50 லட்சம் மதிப்பீட்டில் தாமரைக் குளம் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்டவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தஞ்சாவூர் மண்டல உதவி இயக்குனர் மாஹின்அபூபக்கர், பொறியியல் பிரிவு அலுவலர்கள், பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், துணைத்தலைவர் சம்சுதீன், செயல் அலுவலர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்