வாடகை பாக்கி வைத்த 6 கடைகளுக்கு 'சீல்'-நகராட்சி நடவடிக்கை

Update:2023-10-18 21:18 IST

வந்தவாசி

வந்தவாசியில் வாடகை பாக்கி வைத்த 6 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

வந்தவாசி நகராட்சிக்கு சொந்தமாக புதிய பஸ் நிலைய பகுதியில் 32 கடைகளும், பழைய பஸ் நிலைய பகுதியில் 42 கடைகளும் உள்ளன.

இதில் சில கடைக்காரர்கள் பல லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ளனர். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லையாம்.

இதையடுத்து ஆணையர் எம்.ராணி தலைமையில் மேலாளர் ஜி.ரவி, பொறியாளர் சரவணன் உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் வாடகை பாக்கியை வசூலிக்க கடைகளுக்கு நேரில் சென்றனர்.அப்போது மொத்தம் ரூ.8 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ள 6 கடைகளை பூட்டி அவர்கள் சீல் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்