துறையூரில் முனி ஆண்டவர் கோவில் திருவிழா
துறையூரில் முனி ஆண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றது.
துறையூர், ஆக.11-
துறையூர் பெரிய ஏரிக்கரையில் செச்சைமுனி ஆண்டவர் கோவில் திருவிழா கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று செஞ்ச முனி ஆண்டவர் சிரசை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக தெப்பக்குளம், பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, வடக்கு தெரு வழியாக ஜடாமுனீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை (வெள்ளிக்கிழமை) விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது.