முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

சீவூர் கிராமத்தில் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-04-23 16:53 GMT

குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமம் தலைகசமேடு கவுண்டன்ய மகாநதி கரையோரம் புதிதாக முனீஸ்வரர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலைகள் அமைக்கப்பட்டு திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், கோபூஜை, தனபூஜை, நவகிரக சாந்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, பூர்ணாஹூதி, உபசார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து முனீஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சீவூர் துரைசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கள்ளூர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சீவூர் காளியம்மன் அறக்கட்டளை தலைவர் ஏ.வி.அசோகன், உறுப்பினர் யு.லிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அமுதாலிங்கம், தீபிகாபரத் உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், சீவூர் காளியம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்