பல்நோக்கு மருத்துவ முகாம்

கெங்கவல்லியில் தமிழக அரசு சார்பில் பல்நோக்கு மருத்துவ முகாம் நடந்தது

Update: 2023-06-24 18:32 GMT

கெங்கவல்லி

மருத்துவ முகாம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தமிழக அரசின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா, கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், டாக்டர் வேலுமணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில் கெங்கவல்லி, வீரகனூர், தலைவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை நோய்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதையடுத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

அறுவை சிகிச்சை

தொடர்ந்து கண்புரை நோய்களுக்கான அறிகுறிகள் கொண்டதாக 100 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு விரைவில் அறுவை சிகிச்சை இலவசமாக செய்து தரப்படும் என்றும், தமிழக அரசின் காப்பீடு திட்டம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே முகாமில் ஒரே ஒரு கணினி மட்டும் இருந்ததால் 1,000 பேருக்கு காப்பீடு திட்டத்தை பெற முடியாமல் பொதுமக்கள் நின்றனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த பிறகு மாலை 3 மணிக்கு மேல் 5 கணினிகள் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள், டாக்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்