பல்நோக்கு இலவச மருத்துவ முகாம்

பல்நோக்கு இலவச மருத்துவ முகாம் 24-ந் தேதி நடக்கிறது

Update: 2023-06-16 20:07 GMT


தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பல்நோக்கு சிறப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் வருகிற 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை,கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும், ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இந்த மருத்துவ முகாம் குறித்து தகவல்கள் பொதுமக்கள் அனைவருக்கும் சென்றடைந்து பெருமளவு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகூட்டத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல், துணை இயக்குனர்கள் டாக்டர் யசோதா மணி, டாக்டர் கலு சிவலிங்கம், துணை இயக்குனர் டாக்டர் யமுனா, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கணேசன், நகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்