பல்லாங்குழியான சாலை; பரிதவிக்கும் கிராம மக்கள்
திருப்பரங்குன்றம் அருகே பல்லாங்குழியான சாலையில் பயணிக்க முடியாமல் விவசாயிகளும், கிராம பொதுமக்களும் தினமும் பரிதவித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே பல்லாங்குழியான சாலையில் பயணிக்க முடியாமல் விவசாயிகளும், கிராம பொதுமக்களும் தினமும் பரிதவித்து வருகின்றனர்.
ஒரே ரோடு
திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியில் இருந்து நாகமலைபுதுகோட்டை வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை குறுகிய ஒரு ரோடு அமைந்து உள்ளது. விளாச்சேரி, வடிவேல்கரை, புதுக்குளம், கிளானேரி, நாகமலைபுதுக்கோட்டை ஆகிய கிராம பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதற்காக திருப்பரங்குன்றம், திருநகர் மற்றும் பல்வேறு கிராமபுறங்களுக்கு சென்று வருவதற்கு இந்த ஒரே ரோட்டை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக இந்த ரோட்டின் ஒருபுறம் பாசனத்திற்காக வைகை தண்ணீர் வரக்கூடிய பிரதான நிலையூர் கால்வாயும், மற்றொருபுறம் விவசாய நிலங்களும் அமைந்து உள்ளது. இதனால் தினமும் எண்ணற்ற விவசாயிகள் இந்த ரோட்டை பயன்படுத்தி தங்களது வயலுக்கு சென்று வருகின்றனர். இந்தப்பகுதிகளில் கிணற்று பாசனம் உள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் நெல், வாழை பயிரிட்டு விவசாயம்செய்துவருகிறார்கள். ஆகவே விவசாயிகள் வயல்களுக்கு சென்று வருவதற்கு மாற்றுப்பாதை எதுவும் இல்லாததால் இந்த ரோட்டை பயன்படுத்தி வருகிறார்கள். ரோட்டின் பக்கவாட்டின் இருபுறமும் முள்செடி, கொடிகள் வளர்ந்து புதராகவும் உள்ளது
பல்லாங்குழியான ரோடு
இந்த நிலையில் இந்தரோடு முறையாக பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே குண்டும், குழியுமாக, மேடும் பள்ளமாக உள்ளது. மேலும் சிலஇடங்களில ்பல்லாங்குழிகளாக சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் விவசாயிகளும், கிராம மக்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, கடந்த 12 ஆண்டுகளாக இந்த சாலை இப்படி தான் படுமோசமாக உள்ளது. இது குறித்து பலமுறை புகார் கூறியும் இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்ைல. அவசரத்துக்கு ஆம்புலன்சு கூட சாலையை காரணம் காட்டி வர மறுப்பதால் நாங்கள் மிகவும் அவதிப்பபட்டு வருகிறோம். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.