முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 129 அடியாக உயர்வு
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 129 அடியாக உயர்ந்தது
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 128.40 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2,122 கன அடியாக உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று அணையின் நீர்மட்டம் 129.05 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 3,266 கன அடியாக அதிகரித்தது. வினாடிக்கு 1,655 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.