முள்ளக்காடு, முத்தையாபுரம் பகுதியில் பரவலாக மழை

முள்ளக்காடு, முத்தையாபுரம் பகுதியில் திங்கட்கிழமை மாலையில் சுமார் ½ மணி நேரம் பரவலாக மழை பெய்தது.;

Update: 2022-10-03 18:45 GMT

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி அருகே உள்ளமுள்ளக் காடு, முத்தையாபுரம் பகுதிகளில் நேற்று மாலையில் ½ மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. முள்ளக்காடு, கோவளம் உப்பள பகுதியில் பெய்த மழையினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் உப்பு உற்பத்தி தொடங்க சில நாட்கள் ஆகும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இந்த திடீர் மழையினால் வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்