முலாயம் சிங் யாதவ் விரைவில் குணமடைவார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-02 16:59 GMT

சென்னை,

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவுக்கு இன்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சூழலில் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த சூழலில், ஐ.சி.யூ.வில் அவரை சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும், கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வெளியே வந்து குவிந்து விடவேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அவர் முழு அளவில் குணமடைந்த பின்னர் அவரை சந்திக்கலாம் என்றும் கட்சி தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைவார் என்று நம்புகிறேன்" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்