கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்
கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
காரியாபட்டி,
காரியாபட்டி தாலுகா, முடுக்கன்குளம் கிராமத்தில் உள்ள அழகியநாயகி அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் முதல்நாள் நிகழ்ச்சியாக முடுக்கன்குளம் கிராமத்தில் உள்ள தாமரை ஊருணியிலிருந்து கரகம் எடுத்து முளைப்பாரியுடன் ஊர்வலமாக அழகிய நாயகி அம்மன்கோவிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் முளைப்பாரியை ஊருணியில் கரைத்தனர்.