ஸ்ரீவில்லிபுத்தூரில் முளைப்பாரி திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-08-02 19:28 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

முளைப்பாரி திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு விழா நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் மாயாண்டி பட்டி தெரு, கீழப்பட்டி, மாரியம்மன் கோவில் தெரு, ஊரணிப்பட்டி தெரு, முதலியார் பட்டி தெரு, சிவஞானபுரம் தெரு, திருமலாபுரம், ெரங்கநாதபுரம், சந்திய கிணற்று தெரு போன்ற பகுதிகளில் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் வீடுகளில் முைளப்பாரி வளர்த்து வந்தனர்.

கண்மாயில் கரைக்கப்பட்டது

இதையடுத்து அந்த முளைப்பாரிகளை தெருவில் அமைக்கப்பட்ட பந்தல்களில் வைத்து ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டு கும்மி அடித்து வழிபட்டனர்.

தொடர்ந்து கரகாட்டம், ஒயிலாட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட முளைப்பாரிகள் வடமலைக்குறிச்சி கண்மாயில் கரைக்கப்பட்டது. விழாவினை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்