அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா

அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-10-17 19:51 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம்-தென்காசி சாலை ராமசாமி கோவில் தெருவில் அமைந்துள்ள ராமசாமி கோவில், பேச்சியம்மன் கோவில்களில் புரட்டாசி திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி முத்துக்கொத்தனார் தெருவில் இருந்து பொங்கல் பானை, அம்மன் முளைப்பாரி புறப்பட்டது. சங்கரன்கோவில் முக்கு, ஜவகர் மைதானம் வழியாக மதுரை கடைத்தெரு, வழியாக சென்று ராமசாமி கோவிலை அடைந்தது. இதையடுத்து அங்குள்ள பேச்சியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்