விஜயகரிசல்குளம் அகழாய்வில்மண் சட்டி, தீப விளக்குகள் கண்ெடடுப்பு

விஜயகரிசல்குளம் அகழாய்வில்மண் சட்டி, தீப விளக்குகள் கண்ெடடுக்கப்பட்டது.;

Update: 2023-07-02 20:01 GMT

தாயில்பட்டி, 

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை தங்க அணிகலன், தங்க பட்டை, சுடு மண்ணால் ஆன பொம்மை உள்பட பல்வேறு பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழாய்வில் இதுவரை 10 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று சமையலுக்கு பயன்படுத்திய சுடுமண்ணால் செய்யப்பட்ட மண்சட்டி, கோவிலில் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட கூம்பு, வட்ட வடிவ அகல் விளக்குகள் சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் மண்பாண்ட கூடம் அமைத்து சிறிய பொருட்களை கூட கலைநயமிக்க மண்பாண்ட பொருட்களாக தயாரித்து இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். 


Tags:    

மேலும் செய்திகள்