முசிறியில் திரு இருதய ஆண்டவர் ஆலய திருவிழா
முசிறியில் திரு இருதய ஆண்டவர் ஆலய திருவிழா நடைபெற்றது.
முசிறி, ஜூன்.2-
முசிறி கைகாட்டியில் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா பங்குச்தந்தை குழந்தை ராஜ் தலைமையில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேர்பவனி நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.