சுரண்டை அரசு கலைக்கல்லூரியில் எம்.பில். படிப்புக்கு கலந்தாய்வு கூட்டம்

சுரண்டை அரசு கலைக்கல்லூரியில் எம்.பில். படிப்புக்கு கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.

Update: 2022-09-27 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான வணிகவியல், இயற்பியல், தமிழ் ஆகிய பாடங்களுக்கான ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்.) பயில விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் முறையே 28-ந்தேதி (புதன்கிழமை) தொடங்கி, 30-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 30-ந்தேதி பிற்பகல் இறுதிக்கட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். எனவே விண்ணப்பித்த அனைத்து மாணவ-மாணவிகளும் மேற்கண்ட நாட்களில் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்திற்கு காலை 9.30 மணிக்குள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் வருகை தந்து கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என கல்லூரி முதல்வர் அ.பீர்கான் தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்