கருஞ்சிறுத்தைகள் நடமாட்டம்

கருஞ்சிறுத்தைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Update: 2022-11-13 18:45 GMT

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றி தொட்டபெட்டா, தலைகுந்தா, லவ்டேல் உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சமீபத்தில் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை கவ்வி சென்றது. மேலும் தமிழகம் மாளிகை அருகே உள்ள கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. இந்தநிலையில் ஊட்டி அருகே முத்தோரை பகுதியில் மத்திய அரசின் ரேடியோ வானியல் மையம் பகுதியில் 2 கருஞ்சிறுத்தைகள் நடமாடியது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ள அந்த மையத்தில் கருஞ்சிறுத்தைகள் நடமாடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி வனத்துறையினர் வானியல் மையத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் கருஞ்சிறுத்தைகள் நடமாடியதை உறுதி செய்தனர். தொடர்ந்து அதன் நடமாட்டத்தை கண்காணிக்க அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்