குறுகிய பாதையால் வாகன ஓட்டிகள் அவதி

கோபால்பட்டி அருகே புதிததாக அமைக்கப்படும் சுங்கச்சாவடியில் குறுகிய பாதையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2022-10-07 19:45 GMT

திண்டுக்கல் நத்தம் சாலை விரிவாக்க பணியில் கோபால்பட்டி அருகே கன்னியாபுரத்தில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இதில் வாகனங்கள் சென்று வர 4 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 2 பாதைகள் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 பாதைகளில் சிமெண்டு ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.


இந்தநிலையில் தற்போது வாகனங்கள் சென்று வரும் 2 பாதைகளில் ஒரு பாதை மிகவும் குறுகியதாக இருப்பதால், அந்த வழியாக பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. மேலும் அந்த பாதையில் சென்ற ஏதோ ஒரு வாகனம் மோதியதில் சுங்கச்சாவடி கட்டண அலுவலக கண்ணாடி மற்றும் தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளன. இந்த சுங்கச்சாவடி செயல்படக்கூடாது என இப்பகுதி வாகன ஒட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது குறுகியதாக பாதை அமைக்கப்பட்டுள்ளதால் கனரக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்