கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
சீர்காழி பகுதியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.
திருவெண்காடு:
சீர்காழி பகுதியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.
கடும் பனிப்பொழிவு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. தற்போது சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், திருமுல்லைவாசல், கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இரவு முதல் காலை 8 மணி வரை பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் இரவில் கடும் குளிர் நிலவியது.
வாகன ஓட்டிகள் அவதி
பனிப்பொழிவால் சாலையில் புகை மூட்டாக காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். காலை 8 மணி வரை வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.
மேலும் நடைபயிற்சி செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. சிலர் பனிகுல்லா மற்றும் மப்ளர் உள்ளிட்டவைகளை அணிந்து கொண்டு நடைப்பயிற்சியை மேற்கொண்டனர்.
புகையான் நோய் தாக்கம்
மழை மற்றும் பனிப்பொழிவு ஆகியவை மாறி, மாறி ஏற்படுவதால் சம்பா நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்கம் அதிகரிக்கும் எனவும், கடந்த வாரத்தில் பெய்த கனமழையில் நனைந்த சம்பா நெற்பயிர்கள் காயாத நிலையில் பனி மழை போல் பெய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.