நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணியால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணியால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

Update: 2022-09-15 20:19 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணியால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

அவதிப்படும் வாகன ஓட்டிகள்

நாகர்கோவில் சவேரியார் ஆலய சந்திப்பு முதல் கோட்டார் போலீஸ் நிலையம் வரை பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அங்கு சாலை மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் அனைத்து பஸ்களும் வேப்பமூடு சந்திப்பு, பொதுப்பணித்துறை சாலை, செட்டிகுளம் சந்திப்பு, சவேரியார் ஆலய சந்திப்பு வழியாக செல்கிறது.

கன்னியாகுமரியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பீச் ரோட்டில் இருந்து ஆயுதப்படை மைதானம், ராமன்புதூர் வழியாக செட்டிகுளத்திற்கு வருகிறது. வாகனங்கள் மாற்று பாதை வழியாக இயக்கப்படுவதால் செட்டிகுளம் மற்றும் பீச் ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இருப்பினும் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் நேற்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் வாகனங்கள் சிக்கி நீண்ட வரிசையில் நின்றதை காணமுடிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே செட்டிகுளம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக போலீசார் நியமனம் செய்து போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்