சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள தார் கப்பிகளால் வாகன ஓட்டிகள் அவதி
பாபநாசம் பகுதியில் சாலையோரங்களில் தார்கப்பிகள் கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசம்:
தார்கப்பிகள்
பாபநாசம் பகுதிகளில் தஞ்சை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய தார் சாலை அமைக்க ஏற்கனவே உள்ள சாலையில் தார் கப்பிகள் வெட்டி எடுக்கப்பட்டது. பின்னர் அவற்றை சாலையின் இரு ஓரங்களிலும் கொட்டப்பட்டுள்ளது. பாபநாசம் சாலை மிகவும் குறுகிய பகுதியாகும். சாலையோரங்களில் தார் கப்பிகள் கொட்டப்பட்டுள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிக்களும், பாதசாரிகளும், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளும் மிகவும் அவதிப்பட்டுள்ளனர்.
விபத்துகள்
மேலும் இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகின்றது எனவே சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையின் சாலையின் இரு ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள தார் கப்பிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.