மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி:2 பேர் படுகாயம்

மயிலாடும்பாறை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-30 18:45 GMT

மயிலாடும்பாறை அருகே உள்ள வாய்க்கால் பாறை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 50). கூலித்தொழிலாளி. கருப்பையாபுரத்தை சேர்ந்தவர் ராசு (44). நேற்று இவர்கள் 2 பேரும் மயிலாடும்பாறையில் இருந்து மோட்டார்சைக்கிளில் மூலக்கடைக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை சந்திரன் ஓட்டினார்.

மயிலாடும்பாறை-முத்தாலம்பாறை சாலையில் மூலக்கடை அருகே மோட்டார்சைக்கிள் சென்றது. அப்போது எதிரே மயிலாடும்பாறை நோக்கி அருகுவெளி கிராமத்தை சேர்ந்த குமார் (46) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டத்தில் சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்