மோட்டார் சைக்கிள்கள் மோதல்:அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி

மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2023-01-16 20:02 GMT

காரியாபட்டி, 

மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மானூர் கிராமத்தை சேர்ந்த ஞானமுத்து என்பவருடைய மகன்கள் தினேஷ் குமார் (வயது 28), முத்துக்குமார் (24). கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகூர்கனி (38).

சம்பவத்தன்று இரவில், இவர்கள் 3 பேரும் விடத்தக்குளம் கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் மானூர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

நரிக்குடி சாலையில் ஒரு தனியார் சோலார் நிறுவனம் அருகே சென்றபோது, அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில், வீரசோழனை சேர்ந்த கணேசமூர்த்தி (28), மலைச்சாமி (28) ஆகியோர் வந்தனர். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

3 பேர் பலி

இ்ந்த விபத்தில் தினேஷ்குமார், கணேசமூர்த்தி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தூக்கி வீசப்பட்டு முத்துக்குமார், நாகூர்கனி, மலைச்சாமி ஆகியோர் படுகாயம் அடைந்து கிடந்தனர். பின்னர் 3 பேரும் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.

நாகூர்கனி, மலைச்சாமி ஆகிய 2 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்