மோட்டார்சைக்கிள்-லாரி மோதல்; எலக்ட்ரீசியன் சாவு

மோட்டார்சைக்கிள்-லாரி மோதல்; எலக்ட்ரீசியன் சாவு

Update: 2023-06-28 21:45 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி மாதம்பாளையம் ரோடு பகுதியைச்சேர்ந்தவர் திலீப் (வயது33) எலக்ட்ரீசியன். திருமணம் ஆகாதவர். இவருடைய தாய் புஞ்சைபுளியம்பட்டி அண்ணாநகர் அருகே ஜீவாநகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் திலீப் நேற்று முன்தினம் இரவு தனது தாயை பார்க்க மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தாசம்பாளையம் அருகே சென்றபோது கர்நாடகா மாநிலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து திலீப் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியில் திலீப் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திலீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்