மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் சிக்கினார்
நெல்லை டவுனில் மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் சிக்கினார்.
நெல்லை டவுன் கருவேலங்குன்று தெருவை சேர்ந்தவர் இசக்கிராஜ் (வயது 18). இவருடைய மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்றுள்ளனர். இதேபோல் கருப்பந்துறையை சேர்ந்த முருகன் (44) என்பவர் மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது. இதுகுறித்து டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் திருடியதாக மானூரை சேர்ந்த கணேசன் (39) என்பவரை கைது செய்து 2 மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.