மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
ராமநாதபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது51). இவர் தனது இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் வந்து மதுரை பஸ் நிற்கும் இடத்தில் நிறுத்திவிட்டு தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் அவரது மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றார். இதனை கண்டு ஜானகிராமன் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் மர்ம நபரை மடக்கி பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் கீழக்கரை மீனவர்குப்பம் பகுதியை சேர்ந்தவரான பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் வசித்து வரும் மீனவர் பாலசந்திரன் (35) என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.