மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

Update: 2023-05-22 18:45 GMT

சின்னசேலம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பன் மகன் முத்தழகன்(வயது 38). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கனியாமூர் கூட்டுரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிகிச்சைபெறுவதற்காக ஆஸ்பத்திரிக்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்தழகன் இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிளை திருடிய கள்ளக்குறிச்சியை அடுத்த முடியனூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன்(வயது 33) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்