மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-14 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலடியூரைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை வழக்கம்போல் நிறுத்தியுள்ளார். இந்த மோட்டார் சைக்கிளை அதே ஊரைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் மணிகண்டன் (வயது 23) என்பவர் திருடிச் சென்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் மணிகண்டனை விரட்டிச்சென்றுள்ளனர். மணிகண்டன் ஊர் அருகே மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து வேல்முருகன் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்