மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

வீரவநல்லூரில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-14 18:45 GMT

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் வண்டிமலைச்சி அம்மன் கோவில் 5-வது வடக்கு தெருவை சேர்ந்தவர் குமரேச மாரியப்பன் (வயது 28). இவர் வீரவநல்லூர் பேரூராட்சி குடிநீர் வாரியத்தில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 8-ந் தேதி அவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதுகுறித்து குமரேச மாரியப்பன் வீரவநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் நடத்திய விசாரணையில், வீரவநல்லூர் கோட்டைவாசல் தெருவை சேர்ந்த பகவதி ராஜ் (32) என்பவர் குமரேச மாரியப்பனின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பகவதி ராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்