மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-12-05 19:30 GMT

அன்னதானப்பட்டி:-

சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 35). கொத்தனார். இவர், தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாதகாப்பட்டி அம்மாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்